
பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர்
ஒரு சில தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை அழைத்து இந்த படத்திற்கு இசை அமைக்கச் சொன்னார். ஆனால் முதலில் அவர் மறுத்தார். காரணம் தயாரிப்பாளர் கேஆர்ஜி சில ஆண்டுகளுக்கு முன்பே "நீங்கள் இசை அமைத்தால் முதல் படமாக எனது படம் இருக்க வேண்டும்" என்றார். அதற்கு பாலசுப்பிரமணியமும் ஒப்புக் கொண்டிருந்தார். இதை கூறியே அவர் மறுத்தார்.
அப்படியென்றால் இந்த படத்திற்கு கேஆர்ஜியை தயாரிப்பாளராக்கி விடுகிறேன் என்று சொல்ல அப்படியே நடந்து, படம் தயாரானது. ஒரு கொடுமைக்கார எஸ்டேட் முதலாளிக்கும் அங்கு பணியாற்றும் ஊழியருக்கும் இடையிலான மோதல்தான் படத்தின் கதை. ரஜினி, ராதா, ஜெய்சங்கர், சுஜாதா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றது. அத்தனை பாடல்களும் ஹிட்டானது. என்றாலும் பாடல்களில் தெலுங்கு வாசனை அடிப்பதாக விமர்சிக்கப்பட்டது. அதன்பிறகு ஒரு சில படங்களுக்கு இசை அமைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பின்னர் பாடுவதில் மட்டும் கவனம் செலுத்தினார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!