
ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம்
இன்றைக்கு சினிமாவில் நடிக்க ஆசைப்படுவர்களுக்கு சமூக வலைதளங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன. குறிப்பாக பிரபலங்கள் நடித்ததை, நடனம் ஆடியதை ரீல்ஸாக போட்டு பிரபலமாகி சினிமாவிலும் சிலர் வாய்ப்பை பெற்றுள்ளனர். உதாரணத்திற்கு நடிகை மிருணாளினி ரவியை கூறலாம். இந்நிலையில் ரீல்ஸ் பிரபலங்கள் சினிமாவில் திணறுவதாக வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛இன்றைக்கு நிறைய பேர் ரீலீஸ் பண்றாங்க. அவர்களுக்கு இருக்கும் நிறைய பாலோயர்களை பார்த்து சில இயக்குனர்கள் சினிமாவில் வாய்ப்பு தராங்க. பெரிய பெரிய நடிகர்கள் நடிச்சத, பாட்டு பாடியத இவுங்க எடுத்து ரீல்ஸ் போடுறாங்க. ஆனால் அவர்களுக்கென்று ரியல் டயலாக் கொடுத்து பேச சொன்னால் திணறுறாங்க. நான் நடிக்கும் படங்களில் இதை பார்த்து சில இயக்குனர்களிடம் கேட்டுள்ளேன். அதற்கு இயக்குனர்கள் அவர்களுக்கு ஆயிரம் பாலோயர்கள் இருக்காங்கன்னு சொல்றாங்க. இவர்கள் திணறுவதால் எல்லோருடைய நேரமும், பணமுமே வீணாகிறது. ரீல்ஸ் வந்து பொழுபோக்குக்காக செய்வது. ஆயிரம் பாலோயர்கள் அதுவரை தான் இருப்பாங்க"" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!