
இதயம் முரளி ஹீரோயின்கள் இப்போது பிசியான நடிகைகள் : இயக்குனர் பெருமிதம்
ஆகாஷ் பாஸ்கரன் கூறியிருப்பதாவது: 1995ல் இருந்து 2025 வரை பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை இது. தற்போதைய காலகட்ட கதைக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது. இதற்கான படப்பிடிப்புக்கு அமெரிக்கா செல்ல இருக்கிறோம். இது வெறும் காதல் படம் இல்லை. நட்பு இருக்கிறது, சென்ட்டிமென்ட் இருக்கிறது. கதை கிராமத்தில் ஆரம்பித்து அமெரிக்கா வரை செல்கிறது.
கயாடு லோஹர் , ப்ரீத்தி முகுந்தன், நிகாரிகா, ஏஞ்சலின் ஆகிய நான்கு பேருமே இந்த படத்தில்தான் அறிமுகமானார்கள். இப்போது இவர்கள் அனைவருமே பிசியான நடிகைகள் ஆகிவிட்டார்கள். இது எனக்கு மகிழ்ச்சியா இருக்கிறது. கயாடு லோஹர் "டிராகன்" படத்தின் மூலம் உயரத்திற்கு சென்று விட்டார். ப்ரீத்தி பல படங்களில் நடிக்கிறார். நிகாரிகா இன்ப்ளூயன்சர். நடிக்கக் கேட்டபோது, "விருப்பமில்லை" என்று சொன்னார். கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன். இப்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கிறார், தெலுங்கிலும் நடிக்கிறார். என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!