பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை
மார் 03, 2025
Advertisement
சினிமா தொடங்கிய காலத்தில் ராமாயணம், மகாபாரத கதைகளும், அதன் கிளைகதைகளும் படமாகி வந்த நேரத்தில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான படம் "பக்த துளிதாஸ்". 1937ல் வந்த படத்தை ராஜசந்திரசேகர் இயக்கினார். எம்.கே.ராதா துளசிதாசாக நடித்தார், கே.எஸ்.சபிதா தேவி அவரது மனைவியாக நடித்தார்.
புராண காலத்தில் வட மொழியில் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, அக்பரின் ஆட்சி காலத்தில் அவரது அமைச்சரவையில் மத ஆலோசகராக இருந்த ஆத்மாராவுக்கு மகனாக பிறந்து, ஹிந்தியில் ராமாயணத்தை இயற்றியதாக இந்த படத்தின் கதை அமைந்திருந்தது.
1947ம் ஆண்டு வெளிவந்த "பக்த துளிதாஸ்" படத்தை பி.எஸ்.ரங்கா இயக்கினார். பி.எஸ்.ராஜ அய்யங்கர் துளசிராமாக நடித்தார். அவர் மனைவியாக லட்சுமி சங்கர் நடித்தார். இந்த படத்தில் வால்மீகி அத்தினாபுரத்தில் வாழ்ந்த ராம பக்தரான ஆத்மாராவிற்கு மகனாக பிறந்து தமிழில் ராமாயணத்தை எழுதியதாக அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு படங்களுமே வரவேற்பை பெற்றது.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!