
கிரிப்டோ கரன்சி மோசடி : காஜல், தமன்னாவுக்கு சம்மன்
அசோகனின் புகாரை ஏற்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் கோவையை தலைமை இடமாக கொண்டு "கேஷ்பேக்" என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி கிரிப்டோ கரன்சி மோசடி செய்து வந்த கோவையை சேர்ந்த நித்தீஷ் ஜெயின், அரவிந்த் குமார் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கும்பல் ஒடிசா, டில்லி, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் 50 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது.
இதற்கிடையே "கேஷ்பேக் நிறுவன விழாவில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் பங்கேற்றுள்னனர். மோசடி பணத்தில்தான் அவர்கள் கோடி கணக்கில் சம்பளம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான சம்பளம் எந்த வங்கி கணக்குகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது?. வாங்கிய சம்பளத்திற்கு வரி கட்டி உள்ளனரா? இது மோசடி நிறுவனம் என்பது அவர்களுக்கு முன்பே தெரியுமா? என்பது குறித்து அவர்களிடமே நேரடியாக விசாரிக்க முடிவு செய்தனர். இதனால் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!