
மீண்டும் அந்த தவறு நடக்க கூடாது என கவனமாக உள்ளேன் : நடிகர் ஷாம்
"வாரிசு" படத்துக்குப் பிறகு இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் நான் நடித்து வருகிறேன் . "12பி" படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நான்கு படங்களை நான் ஒப்பந்தம் செய்து நடித்து வந்தேன். அந்தத் தவறை இப்போது பண்ணக்கூடாது என நான் தெளிவாக இருக்கேன். சினிமாவின் தொடக்கத்தில் எனக்கு பெரிய பயணம் அமையவில்லை. 3 வருடம் முயற்சி பண்ணினேன். அதன் பிறகு எனக்கு சினிமாவுல வாய்ப்புக் கிடைச்சது. இன்னைக்கு இருக்கிற பலர் சினிமா பயணத்தோட தொடக்கத்துல பல கடினங்களை சந்தித்துள்ளனர். எனது கெரியரின் ஆரம்பத்தில் எனக்கு சரியான வழிகாட்டி இல்லை. அந்த சமயத்தில் எனக்கு எந்த பின்புலமும் இல்லை இதை நான் குறையாக சொல்லமுடியாது. அதெல்லாம் தெரிஞ்சு தான் நான் சினிமாவுக்கு வந்தேன்" என தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!