
சமுத்திரக்கனி, பரத் இணைந்து நடிக்கும் வீர வணக்கம்
அனில் வி. நாகேந்திரன் இயக்கிய மலையாள வெற்றி படமான "வசந்தத்தின்டே கனல் வழிகளில்" என்ற படத்தின் இரண்டாம் பாகம் தான் வீரவணக்கம். இத்திரைப்படத்திற்கு எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத்,ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என 5 இசையமைப்பாளர்கள் சேர்ந்து ஐந்து பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.
"சிம்மக்குரலோன்" டி. எம். சௌந்தரராஜனின் மகன் டிஎம்எஸ் செல்வகுமார் முதல் முறையாக பின்னணி பாடகராக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மீண்டும் டி.எம்.எஸ்ஸே பாடி உள்ளாரோ என எண்ணத் தூண்டும் வகையில் புரட்சிப் பாடலை அவர் இதில் பாடியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!