
திரிஷ்யம் 3ம் பாகத்தை அறிவித்த மோகன்லால்
அதன்பிறகு கடந்த 2021ம் ஆண்டில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் "திரிஷ்யம் 2" கொரோனா காலகட்டத்தினால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ஹிந்தி, தெலுங்கிலும் ரீ-மேக் ஆனது.
இந்நிலையில் திரிஷ்யம் 3 உருவாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மோகன்லால் அவரின் சமூக வலைதள கணக்கில் திரிஷ்யம் 3ம் பாகம் உருவாகிறது என அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛கடந்த காலம் அமைதியாக இருக்காது. திரிஷ்யம் 3 உறுதியாகிவிட்டது"" என்று குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!