
படம் நடிக்கவா கூப்புடறாங்க, படுக்கத்தான் கூப்புடறாங்க : சனம் ஷெட்டி
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சனம் ஷெட்டி திரையுலகினர் மீது கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். “சமத்துவம் என்பது நான் பத்து பேருடன் படுப்பேன், தம் அடிப்பேன், கஞ்சா அடிப்பேன் என்பதில்லை. சரிசமமான வாய்ப்புகள் எங்களைப் போன்ற நடிகைகளுக்கும் வழங்க வேண்டும். அதுதான் சமத்துவம். ஹீரோக்கு கொடுக்கற சம்பளமும், ஹீரோயினுக்குக் கொடுக்கற சம்பளமும் சமமா இல்லை. ஹீரோவை அப்ரோச் பண்ற விதமும், ஹீரோயினை அப்ரோச் பண்ற விதமும் ஈக்குவலா இல்லை. எங்களை படம் நடிக்கக் கூப்புடறாங்களான்னு பார்த்தால், படுக்கத்தான் கூப்புடறாங்க, அப்படியிருக்கு அப்ரோச்,” என கடுமையாகப் பேசியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!