
முதலில் ஹிந்திக்காக எழுதப்பட்ட கதை தான் 96 : இயக்குனர் பிரேம்குமார்
தற்போது ஹிந்தியில் ஒரு புதிய படத்தை இயக்குவதற்காக ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்து வருகிறார் பிரேம்குமார். அது மட்டுமல்ல 96 படத்தையே முதலில் தான் ஹிந்தியில் படமாக இயக்க விரும்பி தான் கதை எழுதியதாகவும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார் பிரேம்குமார்.
சமீபத்தில் இந்திய அளவில் நடைபெற்ற எழுத்தாளர்கள் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட பிரேம்குமார் பேசியபோது, “என் தந்தை வடநாட்டில் வசித்தவர். நான் வளர்ந்தது எல்லாமே வடநாட்டில் தான். அதனால் எனக்கு ஹிந்தி ரொம்பவே சரளமாக தெரியும். நான் பார்த்து வளர்ந்தது பெரும்பாலும் ஹிந்தி படங்களை தான். அதனால் 96 படத்தின் கதையை எழுதியபோதே அதை ஹிந்தியில் தான் இயக்க வேண்டும் என்று எழுதினேன். அதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்து அதற்காக முயற்சி செய்தபோது காரியங்கள் கைகூடி வரவில்லை. அதன் பிறகு தான் அதை தமிழில் இயக்கினேன். மெய்யழகன் படத்திற்கு பிறகு தற்போது ஹிந்தியில் இயக்கும் விதமாக ஒரு படத்திற்கான கதையை எழுதி முடித்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் பிரேம்குமார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!