
தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை
இதில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடிக்க, அவருக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த இவர் மராட்டிய அரச குடும்பத்தில் பிறந்தவர். நடிப்பு மீது கொண்ட ஆர்வம் காரணமாக தொலைக்காட்சி தொடர்களிலும், ஒரு மராட்டிய படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ் படத்தில் அறிமுகமாகும் பாக்யஸ்ரீ கூறியது, இதுபோல் ஒரு மிகச்சிறந்த அறிமுகம் தமிழில் எனக்கு கிடைத்தது பெருமையாக உள்ளது. எனக்கு தமிழ் தெரியாவிட்டாலும், அந்த மொழியைக் கற்றுக் கொள்ள மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டேன். அதனால் எனது கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழமாக உயிர் கொடுக்க முடிந்தது. "காந்தா" திரைப்படம் வெளியான பிறகு நிச்சயம் ரசிகர்கள் என்னை ஏற்றுக் இங்குள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். அதோடு நிறைய தமிழ் படங்களிலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!