சிவகார்த்திகேயனை இயக்கும் அஹமது
பிப் 03, 2025
Advertisement
வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், இறைவன் உள்ளிட்ட சில படங்களைக் இயக்கியவர் அஹமத். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இறைவன் படம் தோல்வியை சந்தித்தது. இதன் பிறகு இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் இவர் மீண்டும் ரவி மோகனை வைத்து "ஜன கண மன" என்ற படத்தை இயக்கி வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்தபடம் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதையை அஹமத் கூறியுள்ளாராம். இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்து போனதால் இதில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
தற்போது முருகதாஸ், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தலா ஒரு படமும், சுதா இயக்கத்தில் பராசக்தி படமும் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ளன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!