
விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா
மராட்டிய மன்னன் சாம்பாஜியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்கி கவுசல் மகாராஜா சாம்பாஜியாக நடிக்க, மகாராணி எசுபாய் என்ற வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவரது இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு போஸ்டரில், கழுத்து நிறைய நகை அலங்காரத்துடன் பட்டு புடவை கெட்டப்பில் சிரித்த முகத்துடன் காட்சி கொடுக்கும் ராஷ்மிகா, இன்னொரு போஸ்டரில் கோபத்துடன் நிற்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
சமீபத்தில் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்தபோது காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வரும் ராஷ்மிகா, நேற்று பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கி நொண்டி நொண்டி நடந்து சென்று வீல் சேரில் அமர்ந்துள்ளார். அதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!