
சிறப்புக் காட்சிகள் - தெலங்கானா அரசின் அறிவிப்பு தொடருமா?
சிறப்புக் காட்சியில் மரணம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில், இனி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, டிக்கெட் கட்டண உயர்வு கிடையாது என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த வார வெள்ளிக்கிழமை "கேம் சேஞ்சர்" மற்றும் அடுத்த வாரம் சங்கராந்தியை முன்னிட்டு "டாகு மகாராஜ், சங்கராந்தி வஸ்துனம்" ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
அப்படங்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி, டிக்கெட் கட்டண உயர்வு ஆகியவற்றை ஆந்திர மாநில அரசு அறிவித்துவிட்டது. ஆனால், தெலங்கானா அரசு ஏற்கெனவே அறிவித்த அறிவிப்பைத் தொடரப் போகிறதா அல்லது இறங்கி வருமா என திரையுலகினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், "கேம் சேஞ்சர், சங்கராந்தி வஸ்துனம்" ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அதனால், அவர் முயற்சி செய்து அனுமதி வாங்கிவிடுவார் என தெலுங்குத் திரையுலகினர் நம்புகிறார்கள்.
இந்த அனுமதி விவகாரத்தில் தெலங்கானா அரசு கண்டிப்புடன் தொடரப் போகிறதா அல்லது கனிவாக நடந்து கொள்ளுமா என ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!