
100 கோடி வசூலித்த மலையாளப் படம் மார்க்கோ
தற்போது படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வட இந்திய மாநிலங்கள், தெலுங்கு மாநிலங்களிலும் இப்படம் வெளியாகி குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுள்ளது.
மலையாளத்தில் 100 கோடி வசூலைக் கடந்த 9வது படமாக இந்தப் படம் சாதனை புரிந்துள்ளது. "மஞ்சும்மேல் பாய்ஸ்" அதிகபட்சமாக 240 கோடியை வசூலித்துள்ளது. “2018, தி கோட் லைப், ஆவேஷம், புலி முருகன், பிரேமலு, லூசிபர், ஏஆர்எம்" ஆகிய படங்கள் இதற்கு முன்பு 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்களில் "மஞ்சும்மேல் பாய்ஸ், தி கோட் லைப், ஆவேஷம், பிரேமலு, ஏஆர்எம், மார்க்கோ" ஆகிய ஆறு படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு வேறு எந்து ஆண்டிலும் இத்தனை படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றதில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!