
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த டாப் 10 படங்கள்
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த "சிவாஜி" படம்தான் அங்கு நல்ல வசூலை ஆரம்பித்து வைத்தது. அதன் பிறகே பல தென்னிந்திய படங்கள் அந்த வழியைப் பின்பற்றி வருகின்றன. அங்கு பல ஹிந்திப் படங்கள் வெளியானாலும் தென்னிந்தியப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பும் வசூலும் தனிதான்.
அமெரிக்காவில் இதுவரையில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் 22 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து "பாகுபலி 2" படம்தான் முதலிடத்தில் இருக்கிறது. கல்கி 2898 ஏடி படம் 18 மில்லியன், பதான் படம் 17 மில்லியன், ஆர்ஆர்ஆர் 15.34 மில்லியன், ஜவான் 15.23 மில்லியன், புஷ்பா 2 - 15.08 மில்லியன், அனிமல் 15.01 மில்லியன், டங்கல் 12.39 மில்லியன், பத்மாவத் 12.17 மில்லியன், பிகே 10 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்று டாப் 10 இடங்களில் உள்ளன. இவற்றில் தற்போதும் ஓடிக் கொண்டிருக்கும் "புஷ்பா 2" படம் மேலும் வசூலைக் குவித்து சில இடங்கள் முன்னேறலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!