
இசை நிகழ்ச்சி ரத்து - வருத்தம் தெரிவித்த விஜய் ஆண்டனி
இதுபற்றி விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவில், ‛‛வணக்கம் நண்பர்களே. சில எதிர்பாராத காரணங்களாலும், தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இன்று நடைபெறவிருந்த விஜய் ஆன்டனி 3.0 இசை நிகழ்ச்சி வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி. புதிய நிகழ்வு பிரம்மாண்டமாக இருக்கும்"" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு சென்னையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள், போக்குவரத்து நெரிசல் என சர்ச்சையானது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி ரத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!