
சட்டப்படி நடவடிக்கை - அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு
இந்த நேரத்தில் நேற்று உஸ்மானியா என்ற பல்கலைக்கழத்தைச் சேர்ந்த மாணவர்கள் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள். இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், ‛‛உங்களது உணர்வுகளை எப்போது போன்று பொறுப்புடன் பதிவு செய்யுங்கள். அதேசமயம் தவறான கருத்துக்களை யாரும் பதிவு செய்ய வேண்டாம். முக்கியமாக என்னுடைய ரசிகர்கள் என்ற பெயரில் போலியான சமூகவலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டு அவதூறு கருத்துக்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு போலி சமூக வலைதள பதிவுகளுக்கு எனது ரசிகர்கள் யாரும் ஆதரவளிக்க வேண்டாம்"" என்று குறிப்பிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!