
பிளாஷ்பேக் : பாகவதர் ரசிகர்களை சின்னப்பா பக்கம் திருப்பிய ஆர்யமாலா
முதல் படத்தையே பிரமாண்டமாக தயாரிக்க வேண்டும், வெற்றியும் உறுதிப்பட இருக்க வேண்டும் என்று கருதி புகழ்பெற்ற நாட்டுப்புறக்கதையான காத்தவராயன் - ஆர்யமாலா கதையை எடுத்தனர். அப்போது வளர்ந்து வந்த இளம் நடிகர் மற்றும் ஆக்ஷன் ஹீரோவான பி.யூ.சின்னப்பாவை நாயகனாக ஒப்பந்தம் செய்தனர். நாயகியாக எம்.ஆர்.சந்தான லட்சுமியை நடிக்க வைத்தனர். இவர்கள் தவிர என்.எஸ்.கிருஷ்ணன் இதில் நாயகனின் நண்பராக நடித்தார், அவரது மனைவி மதுரம் அவருக்கு ஜோடியாக நடித்தார். அப்போது பிரபலமாக இருந்த பொம்மன் இரானி இயக்கினார்.
ஜி.ராமநாதனின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. படமும் ஹிட்டானது. அதுவரை பாகவதர் ரசிகர்களாக இருந்தவர்கள் சின்னப்பா ரசிகர்களாக மாறினர். பாகவதரிடம் அழகும் பாட்டும் மட்டுமே இருந்தது. சின்னப்பாவிடம் கூடுதலாக வீரமும், சண்டை திறனும் இருந்ததால் அவரது ரசிகர்களாக மாறினார்கள். ஆர்யமாலாவுக்கு விமர்சனம் எழுதிய அன்றைய பத்திரிகைகள் இனி சின்னப்பாதான் நம்பர் ஒண் நடிகர் என்றே குறிப்பிட்டனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!