
தமிழுக்கு வந்த துளு நடிகை
மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏஎம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சிக்கல் ராஜேஷ் கூறும்போது “இந்தப் படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. ஒருவன் சைக்கோ ஆவதற்கு அவனுக்கென தனிப்பட்ட ஒரு காரணம் இருக்கும். இங்கே அப்படி ஒருவன் சைக்கோ ஆவதற்கு இந்த சமுதாயத்தின் மீதான ஒரு கோபமும் ஒரு பொது விஷயமும் காரணமாக இருக்கிறது. அது என்ன என்கிற வித்தியாசமான கதை அம்சத்துடன் இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக படம் தயாராகி வருகிறது
பெரும்பாலான படப்பிடிப்பு ஏற்காடு அருகில் உள்ள வெள்ளிமலை பகுதியில் நடைபெற்றுள்ளது. மேலும் புதுச்சேரி, மரக்காணம் அதை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் திருப்பூரிலும் இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 நாட்கள் நடைபெற்றுள்ளது. தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!