
பெண் பாதுகாப்பை பேசும் வேம்பு
படம் பற்றி இயக்குனர் ஜஸ்டின் பிரபு கூறும்போது “பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதுடன். எப்பொழுதும் காவல்துறையோ, அரசாங்கமோ, தனிப்பட்ட நபரோ பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியாத சூழலில், ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது எப்படி துணிச்சலாக தன்னை பாதுகாத்து கொள்ளலாம் என்கிற ஒரு விஷயத்தையும் இந்தப்படம் சொல்கிறது.
ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தும் விதமாக சமூக பொறுப்புடன் கூடிய ஒரு சரியான படமாக இதை உருவாக்கி இருக்கிறோம். சிறந்த கதை அம்சம்கொண்ட எதார்தமான திரைபடங்களை மக்கள் வெற்றி பெற செய்து வருகின்றனர், அதே போன்ற எதார்த்த சினிமாக்களின் வரிசையில் இதுவும் இருக்கும். நாயகன், நாயகி இருவருமே இந்த படத்தில் தங்களது கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். 2025 பிப்ரவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!