
செல்வராகவனுடன் மூன்றாவது முறையாக இணையும் ஜி.வி.பிரகாஷ்
இப்படியான நிலையில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்திற்கும் தான் இசையமைக்கபோவதாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் ஜி.வி .பிரகாஷ். அந்த பதிவில், செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களை தொடர்ந்து அவர் இயக்கும் புதிய படத்தின் மூலம் மூன்றாவது முறையாகவும் இணைய போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
செல்வராகவன் இயக்கும் இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6:30 மணிக்கு வெளியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!