
பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் ஓட்டம் பிடித்த பாலிவுட் வில்லன்
ஜெய்சங்கர், ராதிகாவுடன் சீமா, சி.எல்.ஆனந்தன், ஐசரி வேலன், என்னத்த கண்ணையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தனியான ஒரு மர்ம தீவில் அந்த தீவுக்கு வருகிற புதியவர்களுக்கு ஏற்படுகிற திகிலூட்டும் அனுபவம்தான் படம். இந்த படத்தில் காளி என்கிற கொடூர வில்லனாக நடித்தார் அப்போது பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக இருந்த ரஞ்சித். எம்.பி.ஷெட்டி என்ற கன்னட நடிகரும் நடித்திருந்தார்.
புதுமையான தந்திர காட்சிகள், திகிலூட்டும் காட்சிகள், சீமாவின் கவர்ச்சியான நடிப்பு, பயங்கர சண்டை காட்சிகள் இவற்றால் படம் நல்ல வசூலை கொடுத்தபோதும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. அதிலும் குறிப்பாக "பாலிவுட் நடிகர் ரஞ்சித்துக்கு இதெல்லாம் தேவையா" என்கிற அளவிற்கு விமர்சனங்கள் வந்தது. இதனால் இந்த ஒரு படத்துடன் மீண்டும் பாலிவுட்டுக்கே திரும்பி விட்டார் ரஞ்சித்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!