
சிறுநீரக கோளாறு : நடிகர் டாக்டர் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த அவர் அவ்வப்போது மோசடி வழக்குகளில் சிறை சென்று வந்தார். தற்போது "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா" என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இந்த நிலையில் சீனிவாசன் நேற்று சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவே அங்கு அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!