
இந்து, கிறிஸ்துவ முறைப்படி கீர்த்தி சுரேஷ் திருமணம்
இம்மாதம் டிச., 11 மற்றும் 12ல் கீர்த்தி சுரேஷ் அவரது காதலர் ஆண்டனி தட்டில் ஆகியோரது திருமணம் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. கீர்த்தி இந்து மதத்தைச் சேர்ந்தவர், ஆண்டனி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். அதனால், அவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கோவாவில் "டெஸ்டினேஷன் வெட்டிங்" ஆக மூன்று நாட்கள் நடைபெற உள்ளது என்கிறார்கள்.
அவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும், திரையுலகத்தைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!