
சினிமா விமர்சனங்களுக்கு 3 நாட்கள் தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு
அதையடுத்து தியேட்டர்களில் யு-டியுப் சேனல்கள் ரசிகர்களின் கருத்துக்களை வீடியோ எடுப்பதை தியேட்டர்காரர்கள் அனுமதிக்கவில்லை. அதனால், கடந்த இரண்டு வாரங்களாக தியேட்டர்களின் வெளியே அந்த வீடியோவை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட விமர்சனங்களை யு-டியுப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் வெளியிட மூன்று நாட்களுக்குத் தடை விதிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென "ரிட் மனு" ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று(டிச., 3) விசாரணைக்கு வர இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!