
புஷ்பா 2க்கு வழி விட்ட தமிழ்ப் படங்கள்
டிசம்பர் 13, 20, 27 ஆகிய நாட்களில் வெளியாக உள்ள சில படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகிவிட்டது. “ராஜா கிளி, சூது கவ்வும், ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், 2 கே லவ் ஸ்டோரி, விடுதலை 2, திரு.மாணிக்கம், பாட்டல் ராதா, கஜானா” ஆகிய படங்கள் அந்த நாட்களில் வெளியாக உள்ள படங்களாக இருக்கும்.
இந்த வாரம் டிசம்பர் 6ம் தேதி ஓரிரு தமிழ்ப் படங்கள்தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. "பேமிலி படம், பிளட் அன்ட் பிளாக்" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 5ம் தேதி தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வெளியாக உள்ள "புஷ்பா 2" படத்திற்காக தமிழ்ப் படங்கள் வழிவிட்டது போல உள்ளது. இப்படத்தை பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் சுமார் 800 தியேட்டர்களில் வெளியிடுகிறது. எனவே, வேறு தமிழ்ப் படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!