
மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண்
தேர்தலுக்கு முன்பாக அவர் நடித்து வந்த “ஓஜி, ஹரிஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங்” ஆகிய படங்களின் படப்பிடிப்பு அதனால் தடைபட்டது. இந்நிலையில் இன்று முதல் "ஹரிஹர வீர மல்லு" படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அவரது வசதிக்காக விசாகப்பட்டிணத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. செப்டம்பர் மாதம் சில நாட்கள் வந்து நடித்த பவன் கல்யாண், இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இப்படத்தை தமிழில் “எனக்கு 20 உனக்கு 18, கேடி," ஆகிய படங்களை இயக்கிய ஜோதி கிருஷ்ணா இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்தின் மகன் இவர். தெலுங்கில் "ஆக்சிஜன், ரூல்ஸ் ரஞ்சான்" ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார் ஜோதிகிருஷ்ணா.
கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குனர் மாற்றம், கொரோனா தாக்கம், பவன் கல்யாணின் அரசியல் வேலைகள் என பல காரணங்களால் தடைபட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!