
கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி
இரு தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் தனது காதலர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ‛‛15 ஆண்டுகால உறவு, எப்போதும் தொடரும் கவுண்டிங்... ஆண்டனி - கீர்த்தி” என குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, இன்று காலை தனது அப்பா, அம்மா ஆகியோருடன் திருப்பதியில் பெருமாளை தரிசனம் செய்த பின் அவர் அளித்த பேட்டியில், “அடுத்த மாதம் கோவாவில் எனது திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக வந்து சாமி கும்பிட்டேன்” என்று கூறியுள்ளார்.
பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொள்ள இருக்கும் கீர்த்தி திருமணத்திற்குப் பிறகு நடிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!