
பொங்கலுக்கு விடாமுயற்சி : வேறு படங்கள் வெளிவருமா?
பொங்கலுக்கு சில படங்கள் வெளியாகும் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், தற்போது அவற்றில் சில மாற்றங்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது. அஜித் நடித்து வரும் "விடாமுயற்சி" படம் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
நேற்றிரவு "விடாமுயற்சி" படத்தின் டீசரை திடீரென வெளியிட்டு, அதில் கடைசியில் படத்தின் வெளியீடு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தப் படம் பொங்கலுக்கு வருமா அல்லது அஜித் நாயகனாக நடித்து வரும் மற்றொரு படமான "குட் பேட் அக்லி" வருமா என்ற குழப்பம் இருந்து வந்தது. அது இப்போது தெளிவாகிவிட்டது.
அஜித் நடித்து கடைசியாக கடந்த வருடம் 2023 பொங்கலுக்கு "துணிவு" படம் வந்தது. இந்த வருடம் எந்தப் படமும் வெளியாகவில்லை. சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிக்கும் படம் வருவதால் தமிழகத்தில் அப்படம் அதிகத் தியேட்டர்களில் வெளியாகும். அதனால் மற்ற படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கும்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள "கேம் சேஞ்சர்" படம் தமிழிலும் டப்பிங் ஆகி ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்திற்குக் கூட தமிழகத்தில் அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!