
‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர்
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தின் டீசர் திடீரென எந்தவித முன்னறிவிப்பு இன்றி நேற்று நள்ளிரவு 11:08 மணியளவில் சர்ப்ரைஸாக வெளியானது. 1:48 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரில் ஒரு வசனம் கூட இல்லை. கார் சேஸிங், அதிரடியான ஆக்ஷன் காட்சிகல் டீசரில் இடம் பெற்றுள்ளன. அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக டீசர் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. "எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு" என டீசரில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட்டில் இந்த டீசர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என டீசரில் அறிவித்துள்ளனர். டீசர் வெளியான 11 மணிநேரத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!