
விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட பகவந்த் கேசரி உரிமை ?
படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வரும் நிலையில் தற்போது அப்படத்தின் ரீமேக் உரிமையை விஜய் 69 தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளதாம். அந்தப் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகவில்லை என படக்குழு சார்பில் தகவல்கள் வெளிவந்தன.
இருந்தாலும் படம் வெளியாகும் போது ஏதாவது ஒரு சர்ச்சை வந்தால் அதைத் தவிர்ப்பதற்காக தற்போது அதன் ரீமேக் உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளார்களாம். அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, அர்ஜுன் ராம்பால், சரத்குமார் மற்றும் பலர் நடித்த அப்படம் 100 கோடி வசூலைக் கடந்த வெற்றிப் படம்.
அப்படத்தின் மையக் கருவை வைத்துக் கொண்டு விஜய்க்கு ஏற்றபடியும், தமிழுக்கு ஏற்றபடியும் காட்சிகளை அமைத்து விஜய் 69 கதை எழுதப்பட்டிருக்கலாம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!