
கனிமொழிக்கும் எனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு : சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினி
மேலும் , கனிமொழி அக்காவுக்கும் எனக்குமிடையே உள்ள உறவு மிகவும் அழகானது. எங்களுடைய நட்பு எங்கு தொடங்கியது எப்போது பழகினோம் என்பது தெரியாது. ஆனால் 20 ஆண்டுகளாக எங்களுக்கு இடையே நல்ல நட்பு உள்ளது. நான் எப்போது மன குழப்பத்தில் இருந்தாலும் உடனே அவருக்கு கால் பண்ணி தான் பேசுவேன். அதுமட்டுமில்லாமல் எங்கேயாவது முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் அவருடன் மட்டும் தான் சொல்லுவேன். அவர் எப்படி பிறந்ததிலிருந்தே அரசியலில் இருக்கிறாரோ அதேபோன்று நான் பிறந்ததிலிருந்தே சினிமாவில் இருக்கிறேன்.
அவருக்கு அரசியல் தவிர எதுவும் தெரியாது. அதே போல் எனக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது என்று கூறியுள்ள ஐஸ்வர்யா ரஜினி, கனிமொழி அக்காவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனபோதிலும் நான் எந்த ஊர் கோவில்களுக்கு சென்றாலும் அவரை சார்ந்தவர்கள் தான் என்னை பாதுகாப்பாக அழைத்து செல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!