முண்டாசுப்பட்டி, ராட்சன் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் புதிய படம் கடந்த வருடத்தில் இருந்து உருவாகி வருகிறது. நீண்ட மாதங்களாக இதன் படப்பிடிப்பு நாட்கள் நீண்டு கொண்டே சென்றது. இதனால் ராம்குமார் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பில் இருந்து சத்யஜோதி நிறுவனம் தற்போது விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் விஷ்ணு விஷால் அவரது வி.வி. புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை கையில் எடுத்து தயாரித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!