
புரமோஷன் நிகழ்ச்சிக்காக வந்தபோது படியில் சறுக்கி விழுந்த விஜய் தேவரகொண்டா
இன்னொரு பக்கம் சர்ப்ரைஸ் ஆக சாஹிபா என்கிற ஆல்பத்திலும் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இவருடன் இணைந்து ஜஸ்லீன் ராயல் மற்றும் ராதிகா மதன் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். இந்த ஆல்பம் வெளியீட்டுக்கான புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மும்பை வந்த விஜய் தேவரகொண்டா விழா நடக்கும் அரங்கிற்கு வந்த சமயத்தில் அங்கிருந்த படிகளில் இறங்கும்போது திடீரென கால் ஸ்லிப் ஆகி படிகளில் சறுக்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை தூக்கினார்கள். இருப்பினும் பெரிய அளவில் காயம் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிளம்பிச் சென்றார் விஜய் தேவரகொண்டா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!