
பான் இந்தியா, சூர்யாதான் இன்ஸ்பிரேஷன் - ராஜமவுலி பேச்சு
“ஆந்திரா, தெலங்கானாவில் மட்டுமே இருந்த தெலுங்கு சினிமாவை, இங்கிருந்து வெளியே கொண்டு போக முக்கியக் காரணம் சூர்யா. "கஜினி" படம் வெளிவந்த சமயம், சூர்யா இங்கு வந்து படத்தை புரமோஷன் பண்ணாரு. அதைப் பார்த்து நமது தெலுங்கு நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சூர்யா என்ன செய்தாரோ அதை நீங்களும் போய் மற்ற மொழிகளில் செய்யுங்கள் என்று ஆலோசனை சொல்லி இருக்கிறேன். சூர்யா, நீங்கதான் "பாகுபலி"ங்கற பான் இந்தியா படத்தைப் பண்றதுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தீங்க,” என்றார் ராஜமவுலி. அப்போது எதிரில் மேடையின் கீழே அமர்ந்திருந்த சூர்யா எழுந்து சென்று இயக்குனர் ராஜமவுலியைக் கட்டிப்பிடித்து தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், “சூர்யாவுடன் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டி இருந்தது. ஆனால், அது நடக்காமல் போனதற்கு நான்தான் காரணம். "கங்குவா" போன்ற படத்தை பலப்பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். அப்படியெல்லாம் படப்பிடிப்பு நடத்துவது சாதாரண விஷயமல்ல. மேக்கிங் வீடியோ பார்க்கும் போது அது எவ்வளவு கஷ்டம் என்பது புரிந்தது. சிவா மற்றும் "கங்குவா" குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த மாதிரியான படங்களை தியேட்டர்களில் பார்க்கும் போது மட்டும்தான் அதை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும்,” எனப் பேசினார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!