
ஆன்மிகப் பயணத்தில் மிருணாள் தாக்கூர்
"சீதா ராமம், குஷி" படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஜக்தேஷ்வர் என்ற இடத்தில் உள்ள இந்து கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாதளத்தில் பதிவிட்டுள்ளார்."ஆனந்தம்" என்ற ஒற்றை வார்த்தையுடன் அந்தப் படங்களைப் பதிவு செய்துள்ளார்.
அவருடைய பக்திமயமான புகைப்படங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் மேலான லைக்குகள் கிடைத்துள்ளது. நடிகையரின் ஆடை, அலங்கார புகைப்படங்களுக்கு மட்டும் ரசிகர்கள் லைக் செய்வதில்லை, அவர்களது ஆன்மிக புகைப்படங்களுக்கும் லைக் செய்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!