
108 விஷ்ணு கோவில்களில் படமாகும் நாகபந்தம்
படத்தை இணை தயாரிப்பு செய்வதுடன் இயக்கவும் செய்கிறார் அபிஷேக் நாமா. படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. சிரஞ்சீவி கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார். படம் பற்றி அபிஷேக் நாமா கூறும்போது ‛‛திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் புதையல் திறக்கப்பட்டதை அடுத்து, பூரி ஜெகநாதர் கோவிலில் உள்ள ரத்ன பண்டாரத்தை அடுத்து, மறைந்துள்ள பொக்கிஷங்கள் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோவில்கள் நாகபந்தம் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. படத்தின் கதை இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோவில்களுடன் தொடர்புடைய நாகபந்தத்தைச் சுற்றி வருகிறது. அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். உலகத்தரத்திலான மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் அற்புதமான படைப்பாக இப்படம் உருவாகிறது. மந்திரம், மர்மம் மற்றும் சாகசங்கள் அடங்கிய புதிய சாம்ராஜ்யத்திற்கு, ஒரு ஆழமான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!