படத்தின் நீளம் : உஷார் ஆன கங்குவா குழுவினர்?
அக் 16, 2024
Advertisement
சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் "கங்குவா". இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது. வரலாற்றுப் புனைவும், அறிவியல் புனைவும் கலந்த படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.
பொதுவாக இந்த மாதிரியான படங்களை சுமார் மூன்று மணி நேரம் ஓடும் விதத்தில்தான் இயக்குனர்கள் உருவாக்குவார்கள். அது மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான சில பிரம்மாண்ட படங்களையும் அதே மூன்று மணி நேரம் ஓடும் விதமாக வெளியிட்டார்கள். அதன்பின் படம் ரொம்ப நீளம் என்று விமர்சனங்கள் வந்த பிறகு பின்னர் அவற்றைக் குறைத்த சம்பவங்களும் நடந்தது.
அதனால், "கங்குவா" குழுவினர் அதை மனதில் வைத்து படத்தின் நீளத்தை இரண்டரை மணி நேரம் மட்டுமே ஓடும் அளவில்தான் "பைனல்" செய்துள்ளார்களாம். ஆகவே, படம் நீளம் என்று படம் வெளியான பின் யாரும் குறை சொல்ல வாய்ப்பில்லை. வெளியாகி உள்ள இந்தத் தகவல் உண்மையா என்பது படத்தின் தணிக்கை முடிந்த பின் தெரிந்துவிடும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!