
புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார்
நாயகன் படத்திற்கு பிறகு 37 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் இணைந்து படம் பண்ணி உள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து அமெரிக்காவிற்கு சென்றார் கமல். அங்கு அவரின் கதர் ஆடை தொடர்பான தொழில் முன்னேற்றத்திற்காகவும், ஏஐ தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ளவும் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்
‛தக் லைப்" படத்திற்கு பின் கமல் அடுத்து ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்து கமலின் போட்டோ ஒன்றை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கமல் புதிய தோற்றத்தில் உள்ளார். அதோடு, ‛‛புதிய துவக்கம், புதிய லுக், ஆரம்பமானது..."" என குறிப்பிட்டுள்ளனர்.
கமலின் இந்த புதிய தோற்றத்தை வரவேற்று அவரின் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் டிரெண்ட் செய்தனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!