தனுஷ் இயக்கும் படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ்
அக் 13, 2024
Advertisement
ராஜ்கிரண் நடிப்பில் பா.பாண்டி படத்தை இயக்கிய தனுஷ் அதையடுத்து ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் வெளியாகும் முன்பே உடனடியாக ‛இட்லி கடை" என்ற மற்றொருபடத்தை இயக்கி, நடித்து வருகிறார். அதோடு, குபேரா, இளையராஜா வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் ஒரு படம் மற்றும் ஹிந்தியில் ஒரு படங்களிலும் நடித்து வருகிறார்.
கைவசமுள்ள இந்த படங்களை எல்லாம் முடித்ததும் மீண்டும் ஒரு படத்தை அவர் இயக்கி நடிக்கப் போகிறார். அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், பிரகாஷ்ராஜ் முக்கியம் வேடத்திலும் நடிக்க உள்ளனர். ஏற்கனவே தொடரி என்ற படத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!