
ஜெயம் ரவியின் 34வது பட அறிவிப்பு வெளியானது
கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் "டாடா". இவரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜெயம் ரவியின் 34வது படமாக உருவாகும் இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என இன்று போஸ்டருடன் அறிவித்துள்ளனர். தமிழக வரைபடம் வடிவிலாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் ஜெயம் ரவியின் ஒரு பாதி முகம் கருப்பு, வெள்ளையிலும், மற்றொரு பாதி கலரிலும் உள்ளது. மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!