
பிளாஷ்பேக் : கிராமத்து காமெடியில் கலக்கிய காளி என்.ரத்னம்
காளி என்.ரத்னம், 1897ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள மலையப்ப நல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார். 5ம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர். 12 வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் பெண் வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். "கோவலன்" என்ற நாடகத்தில் அவர் காளி வேடத்தில் நடித்து புகழ்பெற்றதால் வெறும் ரத்னமாக இருந்தவர் காளி. என்.ரத்னம் ஆனார்.
பதிபக்தி, ராஜமோகன், மாத்ரு பூமி, சபாபதி, மனோன்மணி, திவான் பகதூர், பர்மா ராணி, சூரிய புத்ரி, சிவலிங்க சாட்சி, நாடக மேடை, பிருதிவி ராஜன், போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள். 14 வருடங்கள் சினிமாவில் நடித்தவர் 1950ம் ஆண்டு காலமானார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!