
பிளாஷ்பேக் : விமர்சகர்கள் கிழித்து தொங்க விட்டபோதும் மக்கள் வசூலை அள்ளி கொடுத்த படம்
அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அடர்ந்த காட்டுக்குள் விழுகிறது. அவர்கள் உயிர் பிழைக்க போராடுகிறார்கள். அதே காட்டில் வசிப்பவர் ஜெய்சங்கர். வெளி உலகம் அறியாத அவர் டார்ஜான் மாதிரி விலங்குகளோடு வாழ்கிறவர். அவர் எப்படி விமான விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுகிறார். ஜெய்சங்கர் எப்படி காட்டுக்குள் வந்தார் என்பதுதான் படத்தின் கதை.
இரண்டு மூன்று ஹாலிவுட் படங்களை காப்பி அடித்து இந்த படத்தை இயக்கி இருந்தார் கர்ணன். படத்தில் ஜெய்சங்கர் டார்ஜான் வேடத்திலேயே வருவார், மரத்துக்கு மரம் தாவுவார். கதாநாயகி ஜெயமாலா படு கவர்ச்சியாக ஆடுவார், இன்னும் சில காட்சிகளில் அதுவரை இல்லாத அளவிற்கு பெண்கள் படு கவர்ச்சியாக காட்டப்பட்டிருப்பார்கள். விலங்குகள் இணை சேர்வதை பார்த்துதான் நாயகன், நாயகிக்கு காதலும், காமமும் வரும். இப்படி பல சமாச்சாரங்கள் படத்தில் இருந்தது. இதனால் அன்றைய காலக்கட்டத்தில் இந்த படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் தமிழ் சினிமாவிற்கு புதிய அனுபவமாக இருந்ததால் தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதி வசூல் சாதனை படைத்தது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!