
ஒரே படத்திற்கு ரஜினியின் 3 பட டைட்டில்
இந்த படம் 2209ம் ஆண்டு நடப்பது மாதிரியான சயின்ஸ் பிக்ஷன் கதை. பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக தயாராகிறது. படம் பற்றி இயக்குனர் அனுப் பண்டாரி கூறும்போது "சுதீப் உடன் பணிபுரிவது எப்போதுமே சிறந்த அனுபவம். மக்கள் விக்ராந்த் ரோனாவை மிகவும் ரசித்தார்கள், அவர்கள் இந்த திரைப்படத்தை இன்னும் அதிகமாக கொண்டாடுவார்கள் என்று நான் நம்புகிறேன். சுதீப் இதை தனது மிகப்பெரிய படம் என்று சொல்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு, அதனால் எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வந்துள்ளது” என்றார்.
"பில்லா" படத்தின் டைட்டில் பாலாஜியின் சுரேஷ் ஆர்ட்ஸ் பிலிமிடமும், "ரங்கா" டைட்டில் தேவர் பிலிம்சிலும், "பாட்ஷா" டைட்டில் சத்யா மூவிசிடமும் உள்ளது. இந்த நிறுவனங்களின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. படம் கன்னடத்தில் தயாராவதால் அனுமதி தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!