
புதிய படங்களில் ரசிகர்களைக் கவரும் 80, 90களின் பாடல்கள்
இந்நிலையில் தற்போது வெளிவரும் சில படங்களில் கதையோடு இடம் பெறும் 80, 90களில் வந்த சில படங்களின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த "96" படத்தில் "தளபதி" படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்ற "யமுனை ஆற்றிலே" பாடல் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தி, சர்ச்சையாகியது ஒரு பக்கம் இருந்தாலும் அது இன்றைய ரசிகர்களை ரசிக்கவும் வைத்தது.
அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த "விக்ரம்" படத்தில் "அசுரன்" படத்தில் ஆதித்யன் இசையில் இடம் பெற்ற "சக்கு சக்கு வத்திக்குச்சி" பாடல் ரசிகர்களைக் கவர்ந்தது. அடுத்து "லியோ" படத்தில், "ஏழையின் சிரிப்பில்" படத்தில் தேவா இசையில் இடம் பெற்ற "கரு கரு கருப்பாயி" பாடல் ரசிகர்களை கூகுள் செய்ய வைத்தது.
மலையாளத்தில் வெளிவந்த "மஞ்சும்மேல் பாய்ஸ்" படத்தில் "குணா" படத்தில் இடம் பெற்ற "கண்மணி அன்போடு" பாடல் இடம் பெற்று பரபரப்பாகி, வழக்கு சர்ச்சை, நஷ்ட ஈடு வரை சென்றது. அந்தப் படத்திற்காகவே அந்தப் பாடல் தமிழகத்திலும் ஓடி 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தற்போது "லப்பர் பந்து" படத்தில் "பொன்மனச் செல்வன்" படப் பாடலான இளையராஜா இசையில் உருவான, "நீ பொட்டு வச்ச தங்கக் குடம்" பாடல் வைரலாகி உள்ளது. படத்தின் காட்சிக்குப் பொருத்தமான விதத்தில் படத்தையே தூக்கிப் பிடிக்கும் ஒரு பாடலாக அப்பாடல் அமைந்தது என ரசிகர்கள் சொல்லும் விதத்தில் ரசிக்கப்படுகிறது.
80, 90களில் இன்றைய தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தில் இசைக் கருவிகளை வைத்து உருவாக்கப்பட்ட அந்தப் பாடல்களை திரையில் மீண்டும் கேட்பது தனி சுகம் என்கிறார்கள் இசை ரசிகர்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!