
கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை : மகளிர் ஆணையத்தில் சஞ்சனா கல்ராணி புகார்
இந்த நிலையில் கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை அதிகமாக இருப்பதாக கர்நாடக மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்துள்ளார். மகளிர் ஆணைய தலைவியை சந்தித்து நேரில் புகார் மனு கொடுத்த அவர் பின்னர் நிருபர்களிடம் பேசும்போது :
“கன்னட திரையுலகில் பெண் கலைஞர்களுக்கான தனிப்பட்ட சுதந்திரமான அமைப்பு இல்லை. எனது அறக்கட்டளையான சஞ்சனா கல்ராணி அறக்கட்டளையில் இருந்து, தனியாக சுதந்திரமான அமைப்பை உருவாக்குவோம். இதனால் திரைத்துறையில் நுழையும் புதுமுகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். மேலும், "சாண்டல்வுட் வுமன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்" என்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் கன்னட திரைத்துறையில் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்த முடியும்” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!