
மூன்று மொழிகளில் உருவாகும் படம் ஓம் சிவம்
படம் பற்றி இயக்குனர் ஆல்வின் கூறியதாவது : உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் காதல் ஆக்ஷன் ஜானர் திரைப்படமான இதில் தற்போதைய இளைஞர்கள் காதலுக்காக எந்த நிலைக்கும் செல்ல தயாராகி விடுகிறார்கள். காதலியின் இறப்பால் தடுமாறும் நாயகனின் வாழ்க்கை திசை மாற, திடீரென்று இறந்த காதலி உயிருடன் வருகிறார். அதன்பிறகு நாயகனின் திசை மாறிய வாழ்க்கை என்னவானது?, இறந்த காதலி எப்படி உயிருடன் வந்தார்? என்பதை நான் லீனர் முறையில் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அதிரடி ஆக்ஷனோடு சொல்லியிருக்கிறோம்.
கதாநாயகனின் கதாபாத்திரம் அதிரடி மற்றும் ஆக்ரோஷம் மிக்கதாக இருப்பதோடு, அவரது கதாபாத்திர பெயர் சிவா, அதனால் படத்திற்கு "ஓம் சிவம்" என்று தலைப்பு வைத்திருக்கிறோம். இந்த தலைப்பு அனைத்து மொழிக்கும் பொதுவானது என்பதால், அனைத்து மொழிகளிலும் இதே தலைப்பை வைத்திருக்கிறோம்.” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!