
உண்மை கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள வெப் தொடரில் நஸ்ரியா
தற்போது பல வருடங்களுக்கு பிறகு தமிழில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகின்றார். ஆனால், இது படம் அல்ல வெப் தொடர். இந்த வெப் தொடரில் நஸ்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு நடிக்கிறார். இதனை டைரக்டர் ஏ.எல்.விஜய் தயாரிக்கிறார். சூர்யா பிரதாப் இயக்குகிறார் .
இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இப்போது கிடைத்த புதிய தகவலின் படி, 1940களின் பின்னனியில் இதன் கதைகளம் நடைபெறுகிறதாம். உண்மை கதையான லஷ்மிகாந்தன் கொலை வழக்கு கதையை பின்பற்றி இந்த தொடர் உருவாகிறது. இதில் தியாகராஜர் பாகவதர் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் நடித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். நஸ்ரியா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!