
என்னை நிரூபிக்க நானும் போராட வேண்டும் : நிவின்பாலி வேதனை
இதற்கு முன்பு மற்ற நடிகர்கள் மீது புகார் கூறியவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தற்போது குற்றம் சாத்தியுள்ளனர். ஆனால் நிவின் பாலி மீது குற்றம் சாட்டியுள்ள பெண் கடந்த 2023ல் தனக்கு வாய்ப்பு தருவதாக நிவின் பாலி கூறியதை நம்பி துபாய் வரை அவரை தேடி சென்றதாகவும் அங்கே உள்ள ஹோட்டலில் வைத்து அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நிவின்பாலி மட்டுமல்லாது இன்னும் ஐந்து பேர் மீதும் அவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து நடிகர் நிவின்பாலி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்போது, “இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. இது குறித்து போலீசார் என்னிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது என் தரப்பில் இருந்து நான் கூறிய விளக்கங்கள் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாகவே இருந்தது. இந்த குற்றச்சாட்டு என்னையும் என் குடும்பத்தையும் மிகவும் மோசமாக பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்கள் பலர் அடைந்துள்ள வேதனை போலவே நானும் வேதனை அடைந்துள்ளேன். நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க போராடித்தான் ஆக வேண்டும். என்னை நிரபராதி என நிரூபிக்க சட்ட ரீதியாக எந்த எல்லைக்கும் செல்வேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!